திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் நாகரிக உச்சம் பெற்றிருந்ததாக எடுத்துரைக்கும் நுால். இன்றைய சமூகத்துக்கும் அதன் அறநெறிகள் பொருத்தமாக இருப்பதை விவரிக்கிறது.
‘மனைவி மாண்புடையவளாக இருந்தால், இல்லத்தில் இல்லாதது எதுவுமில்லை’ என்ற குறள் கருத்து நிலைத்து, குடும்ப நியதியாகியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. மதுரை தெரு பெயர்களுக்கு குறளுடன் உள்ள உறவை சுட்டிக்காட்டுகிறது. கல்வி, கலைகளில் தமிழர் சிறந்து விளங்கியதை எடுத்துரைக்கிறது.
குழல், யாழ், பறை, பண், மரப்பாவை போன்ற சொல் பொருட்களை நிறுவுகிறது. குறளில், உழவு தொழில், வணிக நேர்மை, கல்வி பெருமை, அரசாட்சியின் மேலாண்மை, சமூக அமைப்பு பற்றி நயம்பட உரைக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்