பிரபல தொழில் மேதைகளின் வெற்றி ரகசியத்தை கூறும் நுால். வெற்றி அடைவதற்கான உன்னத வழிமுறைகளை விளக்குகிறது.
சுய முன்னேற்றம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தொழில் மேதைகள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்களின் வெற்றி ரகசியங்கள், புதிய யுக்திகள், சிந்தனை முறைகள் கூறப்பட்டுள்ளன. முன்னேற உதவும் வழிகள் வியப்பூட்டும் தகவல்களாக உள்ளன.
உலகளவில் வெற்றி பெற்ற பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்டோர் வாழ்க்கை அனுபவங்களை பகிர்கிறது. வெற்றிக்கான செயல்திட்டங்கள், விரிவான தொழில்முறை உத்திகள் அடங்கியுள்ளன. புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான மொழி நடையில் அமைந்துள்ளது. வெற்றிக்கான சூட்சுமங்களை அறிய உதவும் நுால்.
– இளங்கோவன்