முகப்பு » தமிழ்மொழி » உலகத் தமிழ்க் களஞ்சியம் – ஓர் அறிமுகம்

உலகத் தமிழ்க் களஞ்சியம் – ஓர் அறிமுகம்

விலைரூ.3000

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: ரிதம் பகிர்வாளர்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மாணவர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோர்கள் தமிழ், தமிழகம், தமிழர் தொடர்பான செய்திகளுக்குப் பல நுால்களையும் தேடிப்போகாமல், அனைத்தையும் இந்த ஒரே நுாலில் கண்டறியலாம்.
தமிழகம், தமிழர் பற்றி அறிய விரும்பும் எத்துறையினருக்கும் பயனளிக்கும் களஞ்சியம் இது. மூன்று தொகுதிகளாக உருவாகி உள்ளது.
தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்பான, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள், 2,000க்கும் மேற்பட்ட பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
மேலும் உலகத் தமிழ்க் களஞ்சியம் என்ற பெயருக்கேற்ப உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்கள் பற்றியும், அங்குள்ள தமிழ் அமைப்புகள், தமிழ்க்கல்வி நிலையங்கள், ஆலயங்கள் முதலியன பற்றியும் உள்ள அரிய செய்திகளை இதில் காணலாம்.
தமிழகத்தில் உள்ள, 600 ஊர்களைப் பற்றி, தமிழகத்தில் பாயும், 93 ஆறுகளைப் பற்றி, 800 தமிழ் இதழ்களைப் பற்றி, 720 தமிழகத் தாவரங்களைப் பற்றி, 230 விலங்குகள், பறவைகள் ஆகியன பற்றி, 1,000க்கும் மேற்பட்ட பலதுறைப் பெருமக்களைப்பற்றி, அரிய செய்திகளையும் கானலாம்.
தமிழ் இலக்கணம் பற்றி, 904 தலைப்புகளும், அயலகத்தமிழர் பற்றி, 720 தலைப்புகளும், தமிழ் இலக்கியம் பற்றி, 760 தலைப்புகளும், தொழில் நிலையங்கள் பற்றி, 145 தலைப்புகளும், இதில் இடம் பெற்றுள்ளன.
தமிழின் முதல் திரைப்படம் தொடங்கி பிப்ரவரி, 2016 வரை வெளி வந்துள்ள, 4,000 திரைப்படங்களைப் பற்றிய செய்திகளும் இதில் உள்ளன. அனைத்துச் செய்திகளும் அகர வரிசையில் இடம் பெற்று உள்ளன.
எனினும் அகராதி, அமைப்பு, ஆடை அணிகலன்கள், இசை, இலங்கைத் தமிழர், இஸ்லாம், உணவு, கணினி, கல்வி, கிறிஸ்துவம், சட்டம், சமயம், சித்தம், சிற்பம், சுற்றுலா, சோதிடம், வரலாறு, தொல்லியல், நடனம், நாட்டுப்புறவியல், நாடகம், நுாலகம், பழக்க வழக்கம், நம்பிக்கைகள், புவியியல், மருத்துவம், விலங்கியல், விழா, விளையாட்டு, வேளாண்மை போன்ற, 39 தலைப்புகள் வழியாகவும் செய்திகளைத் தேடும் வசதி இந்நுாலில் உள்ளது.
மலேஷியாவின் முன்னணி பதிப்பகங்களில் ஒன்றான, உமா பதிப்பகம் இந்நுாலை வெளியிட்டுள்ளது.
இதன் உரிமையாளர் தமிழ்த் தொண்டர் டத்தோ ஆ சோதிநாதன், இன்றைய சூழலில் பெரும் பொருட்செலவில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
த.பெ.ஜெ.,யின் கல்லுாரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், ‘சுட்டி’ இதழின் நிறுவனரும், எழுத்தாளரும், இதழாளருமான டாக்டர் இ.ஜே.சுந்தர் இந்நுாலின் முதன்மைப் பதிப்பாசிரியர் ஆவார்.
தமிழ்ப் பாசறைக்கு வலிமை சேர்க்கும் இன்னொரு புது அறிவாயுத மாக உருவாக்கபட்டுள்ள இக்களஞ்சியம் மலேஷியாவில் கருக்கொண்டு, தமிழகத்தில் பிறந்து, உலகிற்கே பொதுச்சொத்தாக விளங்கும் குழந்தையாக வெளிவந்துள்ளது.
அரசோ அல்லது பல்கலைக்கழகமோ பல ஆண்டுகள் செய்யவேண்டிய மாபெரும் பணியை, இந்த அறிஞர் குழு தமிழ் மேல் கொண்ட மாசற்ற பேரன்பினால், சிறப்பாக உருவாக்கி உள்ளது.
இந்தத் தமிழ்க் களஞ்சியத்தின் வெற்றி, தமிழர்கள் அதிகமாக வாங்குவதின் மூலம் வெளிப்படும். இக்களஞ்சியத்தின், மூன்று தொகுதிகளுக்குமான விலை, 3,000 ரூபாய் மட்டுமே.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us