முகப்பு » தமிழ்மொழி » தமிழ் முழக்கம்

தமிழ் முழக்கம்

விலைரூ.150

ஆசிரியர் : வா.மு.சேதுராமன்

வெளியீடு: கவியரசன் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை வேண்டும். தமிழ்த்தாய் மண்ணில் தமிழைப் பின்னுக்குத் தள்ளும் வேறு எந்த செயலுக்கும் இடம் தரக்கூடாது என வலியுறுத்தியுள்ள நுால். பிற மொழி ஆதிக்கத்தை எதிர்த்துக் களம் காண்பது, தமிழ் வாழ்க என்ற முழக்கம் வீறு கொண்டு எழுந்தது, அண்ணாதுரை காலத்தில் உருவாகிய இருமொழிக் கொள்கை, தமிழுக்கே முதன்மை தராமல் ஆங்கில ஆதிக்கத்திற்கு அடிகோலியது பற்றிய தகவல்கள் உள்ளன.

ஆங்கிலம் வாயிலாகக் கற்றால் வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்பது ஒரு மாயை, தாய்மொழி வழியாக ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்றாலே, வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழின் இனிமை, தமிழர் நிலை, தமிழ் வழிக் கல்வி, தமிழர் புரட்சி, மொழிச்சிக்கல் தீர வழி, தமிழர் தலைமை வேண்டும், தமிழ் முழக்கம் என்பன போன்ற முழக்கக் கருத்துக்களை வெண்பா வடிவில் பதிவு செய்துள்ள நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us