முகப்பு » ஆன்மிகம் » ஞானகர்ம சந்நியாச யோகம்

ஞானகர்ம சந்நியாச யோகம்

விலைரூ.301

ஆசிரியர் : தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா

வெளியீடு: ஓங்காரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கீதா உபதேசம் மேற்கோள்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். ஸ்லோகங்களுக்கும் எளிய நடையில் பொருள் கூறப்பட்டிருப்பதோடு, மகாபாரத, புராண நிகழ்வுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. எவன், யார் மனதையும் புண்படுத்தாது, இறை சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ அவனே இறைவனுக்கு உகந்தவன்; இறைவா என்று கூப்பிட்டதும் மகனே என்று கேட்கின்ற தன்மையை பெற்றிருப்பன் இறைவனுக்கு உகந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகவான் அருளுரைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. யார் எங்ஙனம் வேண்டுகிறார்களோ  அங்ஙனமே சார்ந்து இருக்கிறேன்; பற்றற்ற நிலையிலே சுகமும், ஆனந்தமும், திருப்தியும் உண்டு; ஒன்றைப் பற்றி சுகம் அடைவதை விட, பற்றற்ற நிலையில் சுகம் அடைவதே உத்தமம் என விவரித்துள்ளது. பகவத் கீதையின் சாராம்சத்தைத் தெரிந்து, வாழ்வில் பயன்படுத்த உதவும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us