முகப்பு » சுய முன்னேற்றம் » நம்பிக்கை வாழ்க்கை

நம்பிக்கை வாழ்க்கை

விலைரூ.220

ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்வை, நம்பிக்கையால் அழகுபடுத்துவது குறித்து கற்றுத்தரும் நுால். மனதில் உறுதிக்கு முதலிடம் தரும் வகையிலான கருத்துகளை கொண்டுள்ளது. இந்த  புத்தகம், ‘உற்சாக மனிதர்கள்’ எனத் துவங்கி, ‘உயர்ந்த மனிதர்கள்’ என்ற அத்தியாயத்துடன் முடிகிறது. அமைதி நிலையில் இந்த உலகை பார்க்கும் விதத்தை மிக லாவகமாக கற்றுத்தருகிறது.

நம்பிக்கை என்ற இனிய கலையை இதமாக புரிந்து செயல்பட வழிவகை செய்கிறது. வாழ்வை இனிமை நிறைந்த சோலையாக்கும் வித்தையை மனதில் விதைக்கிறது. ‘சுய நலத்துக்காக பணத்தை தேடி ஓடுபவர், மக்களின் நன்மதிப்பு பட்டியலில் இடம் பெற மாட்டர்’ என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் வகையிலான கருத்துகளைக் கொண்டுள்ள நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us