தாஜ்மஹால் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு; கிரிக்கெட் பைத்தியத்திற்கு நிவாரணம் அளித்த சுய பரிசோதனை; வேலைக்குச் செல்லும் பெண்ணின் பரிதவிப்பு என நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
நடந்ததை எண்ணி கவலைப்படுவதை விட, நடக்கப்போவதை சிந்திப்பதே சிறந்தது போன்ற கருக்களை கொண்டுள்ளது. உடல் குறைபாடுள்ள குழந்தையின் தாய் படும் வேதனை; பஸ் சக்கர தத்துவம்; பெண்ணை ஈர்க்கக் கூறிய ரகசியம் என அனுபவத் தொகுப்பாக அமைந்துள்ளது. சமூக, குடும்ப பிரச்னைகளை நாசூக்காகக் குரலை உயர்த்தாமல், நிகழ்வுகளின் ஊடே எடுத்துச் சொல்கிறது.
– இளங்கோவன்