பண்டை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்களை கதை சொல்லி, ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
பசியைத் தணிக்க உணவு உண்ண வேண்டும். அதற்கு முன்கூட்டியே சமையல் பொருட்களைத் தயார் செய்து கொள்வதுபோல, ஆயுட்கால நிம்மதியான நிறைவுக்கு இறையருளை இள வயது முதலே சேகரித்துக் கொள்ள வேண்டும்.
உதவி அளித்தலும், பெறுதலும் மனிதரிடம் வரம்புக்கு உட்பட்டது. இறைவனின் பெருங்கருணை அளப்பரியது. அர்ப்பணிக்க ஏதுமில்லாவிட்டாலும், எல்லையற்ற வகையில் ஆண்டவன் அருள்புரியத்தான் செய்கிறான். விரும்பிப் படித்தால் உயர்வடையச் செய்யும் அற்புத நுால்.
-– பிரபு சங்கர்