நடனக் கலையை வளர்க்க ஆங்கிலத்தில் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்ட படைப்பு. வண்ணப்படங்கள், அதுவும் நடனத்தின் நளினங்களைக் காட்டும் படங்கள் கருத்துக்கு விருந்தளிக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ் நடனக் கலைக்கு ஆற்றி வரும் தொண்டு அபாரமானது. இதில் பரதம், மோகினியாட்டம், குச்சுப்புடி, கதகளி ,ஒடிசி என்று எல்லாவகை நடனங்களும் பக்கத்திற்குப் பக்கம் வண்ண வழுவழுத்தாளில் விளக்கப்பட்டிருக்கின்றன.
எவ்வளவு நயமாக ஒவ்வொரு அம்சமும் விளக்கப்படுகிறது என்பதை "கதகளி மேக்அப்' பகுதியில் (பக்கம் 95ல்) காணலாம். இதில், 37 படங்களைப் பார்க்கும் போது கதகளி ஆட்டத்திற்கு முன் போடப்படும் மேக் அப் எவ்வளவு பிரமாண்டமானது என்று புரியும். அதுவும் 36ம் பக்கத்தில் அங்கவஸ்திரத்தில் அமைந்த "பல்பு' பகுதி அவிழ்த்து விடப்பட்டதும், அடுத்த படத்தில் அது எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தால், எவ்வளவு நயமாகத் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று புரியும்.
கதக்களி என்பதும் கதக் என்பதும் வேறு வேறானவை .இது பக்கம் 121ல் தரப்பட்ட தகவல்.
மொத்தம் 150 பக்கங்களில் இப்படி அருமையான கலைப்படைப்புகள் கொண்ட உயரிய வெளியீடு.