இந்த நூலாசிரியர் சுரேஷ் ஒரு வக்கீல். இந்திய நுண்கலைகளை எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் வெளியீடுகள் கொண்டுவரத் திட்டமிட்டு இந்த முயற்சியில் ஈடுபட்டார். இந்த நூல் முழுவதும் பரத நுணுக்கங்களைக் கொண்டது. இந்த நூலை உருவாக்கிய வித்யா பவானி சுரேஷ் சிறந்த பரத நாட்டியக் கலைஞர். பல்வேறு முத்திரைகள் படத்துடன் இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான முத்திரை பாவங்களை விளக்கியிருப்பவர் மகிதா சுரேஷ். ஏழரைவயதுச் சிறுமி தாய், தந்தையுடன் சேர்ந்து இதில் பங்கேற்றிருப்பது இந்த நூலின் மற்றொரு சிறப்பு.