எஸ்.கே.எம்., பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 400).
கே.சி.லட்சுமி நாராயணன் சிறந்த பத்திரிகை ஆசிரியர். மானுடத்தை நேசிப்பவர். தமிழக அரசு முதல், காஞ்சித் திருமடம் வரை பாராட்டப் பெற்றவர். நேரில் கண்ட சம்பவங்கள், காட்சிகள், கேட்ட செய்திகள், வாசித்த புத்தகங்கள் இவைகளால் எவன் கிளர்ந்தெழுந்து கோபப்பட்டும், மகிழ்ந்தும், நெகிழ்ந்தும் பாராட்டியும் எழுதுகிறானோ அவனது எழுத்துக்களுக்கு மரணமில்லை என்பது ஒரு சிந்தனையாளனது கருத்து. அந்த வகையில் இவரது வாழ்வியலில் அன்றாடம் பார்த்ததையும், கேட்டதையும், படித்ததையும் வைத்து தனது நெஞ்சில் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளின் உதிரத் துடிப்புகளே சிந்தனைகள் என்ற நூல். அரசியல், ஆன்மிகம், இலக்கியம் இவைகளின் களத்தில் பல புதிய செய்திகளை பதிவு செய்துள்ளார். 53 தலைப்புகள். அரசியல் அலசல் 11, ஆன்மிகச் சிந்தனைகள் 36 என அவ்வப்போது இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இந்நூல். வாசித்து பயனடையலாம்.