நூலாசிரியர்: ஜெகதா.குறிஞ்சி, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 240)
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள திருமங்கை ஆழ்வாரது பெரிய திருமொழியானது 108 திருப்பதிகளது நாயகரை வாழ்த்திப் பாடிய 1084 திருப்பாசுரங்களைக் கொண்டது. திருமங்கை ஆழ்வாரது வாழ்வியல், பெரிய திருமந்திரங்களின் மகிமை, திருத்தலங்களாக திருப்பிரிதியில் துவங்கி, அனைத்துப் பாசுரங்களையும் உரையாக்கித் தந்துள்ளார் ஆசிரியர். மூலமும் சேர்த்திருந்தால் உரை நடையை ஒப்பு நோக்கி வாசகருக்கு வாசித்துணர வாய்ப்பாயிருக்கும்.