ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 176 விலை ரூ55)
செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.