மணிமேகலை பிரசுரம், சென்னை-17. (பக்கம்: 332)
படைப்பாளியாக தான் உருவாகக் காரணமான சிங்கப்பூர் நகருக்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வித்தியாசமானது. புதுமையானது வாசகராக இருந்து நிறைய நூல்களை படித்து 1995ல் எழுத ஆரம்பித்து, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதி பரிசும் பெற்றுள்ள இவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.சிங்கப்பூர் கதைக்களத்தில் சீனக்கிழவி வருகிறாள். மலாயக்காரர்கள் வருகின்றனர். கலாசாரம் சங்கமம். நமக்கோ வித்தியாசமான கதைகள் கிடைத்துவிட்டன.ஆசிரியையின் எழுத்துப்பணி சிறக்க படிக்கும் வாசகர்கள் நிச்சயம் வாழ்த்துவர்.