நன்மொழி பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி-605 003. (பக்கம்: 330. விலை: ரூ.120).
இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள ஆசிரியர் ஆன்மிகப் பத்திரிகைகளில் சிறிய நீதிக் கதைகள் எழுதி பிரபலமானவர். மேலும் பல கதைப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார். 351 சின்னஞ்சிறு கதைகளுடன் கூடிய இந்தத் தொகுப்பில் சிந்திக்கவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் பல கதைகள் உள்ளன. ஆசிரியர் குறிப்பிட்டது போல், பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பில் கதை தன்மை உள்ள சில கதைகளும் சுவையான சம்பவங்களின் தொகுப்புகளாக சில கதைகளும், கேள்வி - பதில் பாணியில் சில கதைகளுமாக பல ரகமான பல தினுசான கதைகள் வாசிப்பதற்கு உள்ளன.
பொதுவாக இதுபோன்ற சின்னஞ்சிறு கதைகள் ஒரு தொகுப்பில் இடம் பெறுகையில் அவற்றின் மொத்த எண்ணிக்கை 50ல் இருந்து 100க்குள் இருந்தால் நல்லது. இதில் உள்ள பல கதைகள் இதற்கு முன் படித்திராத, கேட்டிராத கதைகள் என்பது உண்மை தான்.