சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 164. விலை: ரூ.50).
இந்நூலை எழுத்துப் புதையல் என கருணாநிதி முகமன் கூறியிருப்பது ஆசிரியர் அவரது ரத்தத்தின் ரத்தம் என உணர்த்துகிறது. ஓரளவு சுமாராகக் கதை எழுதும் ஆற்றல் இருப்பினும் (நூலில் உள்ள `அக்காளுக்குப் படையல்,' `முடிவல்ல.' `சங்காமிர்தம்' இல்லம்' போன்றவை) மேலும் பல்வேறு வெற்று வேட்டுகளை உருவாக்கிப் பக்கங்களை நிரப்பியதுடன், அயோத்தி மசூதி இடிப்பு - ராமர் கோயில் பின்னணியில், விஷமத்
தனமாக, ஒரு அக்கிரகாரத்து ராமநாதனை கொலைகாரனாக்கி, அப்துல் ரகீமுடன் முடிச்சுப் போட்டிருப்பது கொடூரமானது! (பக்:15-22). திராவிடர் கலாசாரத்தின் முன்னோடிகள் எழுதிய கம்பரசம், ரோமபுரி ராணிகள், பராசக்தி, இரவு ராணிகள், திருப்பிப் பார் போன்ற காமக்களியாட்டங்களை முன்வைத்து சித்தம் கலங்கிய நிலையிலே இந்நூல் எழுதப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது. இந்திய தண்டனைச் சட்ட விதிகளை மீறி எழுதப்பட்ட பல தகவல்களும் உண்டு.