எல்.கே.எம்., பப்ளிகேஷன், ப.எண். 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம் 160 )
முதல் தொகுதியில் 43 குறள்களுக்கான சிறுவிளக்கமும், அந்தக் குறளின் கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது. அநேக கதைகள் குறளின் கருத்துக்கு ஏற்ப இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால், சொல்லப்பட்டுள்ள கதைகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளன. இரண்டாவது தொகுப்பில் உள்ள 50 குறள் தொடர்பான கதைகளுக்கும் இது பொருந்தும்.
ஆசிரியரின் கதை சொல்லும் அபாரத் திறமை ஒவ்வொரு கதையிலும் பளிச்சிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு கதையின் முடிவிலும், பயனுள்ள ஒரு தகவல். அறிவுரை போல், நீதி போல் சொல்லப்பட்டுள்ளது. ஆசிரியரின் பரந்துபட்ட ஞானம் நமக்குப் புரிகிறது. சிறுவர்களுக்கான சிறந்த நீதிக் கதைகள் என்ற வகையில் இது ஒரு நல்ல தொகுப்பு. சிறுவர்களுக்குப் பரிசு அளிக்கலாம். பள்ளி நூலகங்களில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்.