முகப்பு » ஆன்மிகம் » திருவருட்பா மூன்றாம்

திருவருட்பா மூன்றாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி

விலைரூ.65

ஆசிரியர் : பகீரதன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208)

திருவருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பா நூலில் மூன்றாம் திருமுறையாக அமைக்கப்பட்டிருக்கிறது திருவடிப்புகழ்ச்சி என்ற நீண்ட பாடல். இந்தப் பாடல் நான்கே அடிகள் உடையது. ஆனால், ஒவ்வொரு அடியிலும் 224 சீர்கள் அமைந்திருக்கின்றன. படிப்பதற்கு வசதியாக 224 சீர்கள் கொண்ட ஒவ்வொரு அடியையும் எட்டு எட்டாகப் பகுத்து மொத்தம் 32 பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

`சமஸ்கிருதம் மற்ற மொழிகளுக்குத் தாய்மொழியானால் தமிழ் அவற்றுக்குத் தந்தை மொழி' என்று விவாதித்தவர் வள்ளலார். தமிழ் என்னும் சொல்லுக்கு உரையிட்டு மகிழ்ந்தவர். அவருடைய திருவடிப்புகழ்ச்சி என்ற இந்த நான்கடிப் பாடல் கலப்பற்ற சமஸ்கிருதச் சொற்களுடன் தொடங்கிப் பின் சமஸ்கிருதமும், தமிழும் கலந்ததாக நடைமாறிச் சற்று தூரம் ஓடி அதன்பின் நல்ல தமிழுக்கு மடைமாறி முடிகிறது.

வள்ளலார் ஏன் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினார்? சமஸ்கிருதம் என்பது வடமொழி என்று சொல்லப்படுகிறது. `வடமொழி என்பது வடதேசத்து மொழி அல்ல; அது தமிழர்களாகிய தென்னவர்களால் ஓசைக்குற்றம் இன்றி உருவாக்கப்பட்ட மொழி; அதற்குப் பெயர் வடமொழியன்று; மாறாக வடல்மொழி' என்று விளக்கம் சொல்கிறார் ஆசிரியர். வடல்மொழி என்பது வடு அல் மொழி; அதாவது, குற்றமற்ற மொழி. அதை விளக்கும் போது உடம்புக்கும் திசைகள் உண்டென்றும், உடம்பின் முகப்பகுதி கிழக்கு, பிடரிப் பகுதி மேற்கு, தலைப்பகுதி தெற்கு, உடற்பகுதி வடக்கு என்றும் சொல்கிறார். உடலில் தலையே முதலில் உருவாகிறது. ஆகையால், அது பூர்வம் என்றும், உடல் பிறகே உருவாகிறது. ஆகையால் அது உத்தரம் என்றும் சொல்லப்படுவதாகவும், முதலில் தோன்றிய தலை தெற்கு, தென்னாடு, தமிழ் என்று வழங்கப்படுவதாகவும், பின்னால் தோன்றிய உடல் வடக்கு, வடல் மொழி என்று வழங்கப்படுவதாகவும் அருளாளர்கள் வழிநின்று விளக்குகிறார். இறைவனின் திருவடிகள் மனிதனின் தலையுச்சியில் இருக்கின்றன. புகழ்ச்சிக்குரிய அந்தத் திருவடிகளை அடைய வேண்டுமானால் ஒருவன் உத்தரம் என்றும் வடக்கு என்றும் சொல்லப்படும் உடல் பற்றி வரும் இன்பங்களைத் துறந்து பூர்வம் என்றும் தெற்கு என்றும் சொல்லப்படும் தலைப்பகுதியை நோக்கிச் செல்ல வேண்டும். உத்தரப் பகுதியின் குறியீடு வடல்மொழி அதாவது சமஸ்கிருதம். தலைப்பகுதியின் குறியீடு தென்மொழி. அதாவது தமிழ். உடலில் இருந்து தலைக்குச் சென்றால் தான் வீடுபேறு என்பதைப் பயில்வோனுக்கு அடையாளப்படுத்தும் வண்ணம் வடல்மொழியில் தொடங்கி மெல்ல வடமொழியும், தென்மொழியும் கலந்ததாக நடைமாறிப் பின் முற்றிலுமாகத் தென்மொழிக்கு மடை மாறுகிறார் வள்ளலார் என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார். படிக்கிறவர்கள் இந்த எடுப்பின் வன்மை மென்மைகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும் எடுப்பு படிக்கச் சுவையாகவே இருக்கிறது.

பாடலுக்கு உரை சொல்லும் போது, மூலத்தைப் பொருளுள்ள பதங்களாகப் பிரித்தெடுத்து அவற்றுக்கு உரை சொல்கிறார். பிறகு நெடிதான விளக்கம் சொல்கிறார். விளக்கம் சொல்லும் போது, படிக்கிறவனுக்கு என்னென்ன கேள்விகள் எழும் என்று ஆசிரியர் முன்னதாகவே கணித்து, அந்தக் கேள்விகளைத் தானே தன் விளக்கவுரையில் எழுப்பிக் கொண்டு அவற்றுக்கு விடை தெளிவிக்கிறார். மரபு வழிப்பட்ட இந்த உரைப்பாணி, படிக்கிறவனுக்குக் கேள்வி எழுப்பிக் கொண்டு படிக்கிற சிரமத்தைக் கூடக் கொடுக்காமல், விளக்கிக் கொள்ளும் வேலையை எளிதாக்குகிறது.

சகலர், விஞ்ஞானகலர், பிரளயாகலர் ஆகிய சைவ சித்தாந்த மெய்யியல் சொற்களை மக்கள் அறிவர். பெருமுயற்சியாள

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us