குறிஞ்சி, 20ஏ, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம், சென்னை - 42 (பக்கம்: 120)
அருட்பெருஞ்ஜோதி வடலூர் வள்ளலார் உலகுக்கு காட்டிய ஆன்மிகப் பாதை முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக மனித நேயம், நற்சிந்தனை, பிற
உயிர்களிடம் கருணை போன்ற தார்மீக நெறிகளை ஒருங்கிணைத்து அவர் ஆன்ம நேயத்தை மக்கள் முன் வைத்தார். இந்த நூலின் ஆசிரியர்
சிவசித்தன், வள்ளலாரின் திருஅருட்பாவில் ஊறித் திளைத்தவர் போலும், இருபத்தெட்டு தலைப்புகளில் அருட்பாவின் விழுமிய கருத்துக்களை உரிய
எடுத்துக் காட்டுகளுடன் கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார்.
ஆகாரம் அரை; நித்திரை அரைக்கால்;மைதுனம் வீசம்; பயம் பூஜ்யம்'
என்ற வள்ளலாரின் ஆரோக்ய ஆலோசனையை ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். `தனித்திரு, பசித்திரு, விழித்திரு' - இது வள்ளலாரின் மூன்று மகா
மந்திரம்.
திருக்குறள், திருமந்திரம், சித்தர் பாடல்கள் என பல உயரிய நூல்களில் இருந்து வள்ளலாரின் ஆன்மிகக் கருத்துக்களுக்கு ஆதரவாக அவர் எழுதியுள்ள
மேற்கோள்கள் ஆசிரியரின் பரந்துபட்ட கல்வி ஞானத்தை நமக்கு உணர்த்துகிறது. நல்ல புத்தகம்.