அருள்மிகு அம்மன் பதிப்பகம், 8, கங்கையம்மன் கோயில் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14.
ராகவேந்திரர் அற்புதங்கள், ராகவேந்திரரின் மகிமைகள் பிருந்தாவனங் கள் என்று பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த பாகம் வெகு சிறப்பாக உள்ளது. படித்து விட்டு கீழே வைக்க மனமில்லாமல் புத்தகத்திலேயே ஐக்கியமாய் விடுவது போல மகிமைகள் குறித்த தகவல்கள் உள்ளன.
சாளக்கிராம பெயர்க் காரணம் மற்றும் அதைப் பற்றிய தெளிவான செய்திகளை விளக்கியிருப்பது அருமை. பிருந்தாவனம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை சிற்பி நரசிம்மமூர்த்தியை பேட்டிக் கண்டு நமக்கு விளக்கியிருப்பது புதிய செய்தி. எல்லோரும் படிக்க வேண்டிய நூல்.