அருண் நிலையம், 62/3, முத்து முதலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. ( பக்கம்: 400)
கோயில் இல்லாத ஊரி ல் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர். அதைப் பின்பற்றியே, வடக்கே காஷ்மீரி லிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை எந்த மாநிலத்திற்கு சென்றாலும் கோயில்கள் நிறைந் துள்ளன. சிலருக்கு வடமாநில மற்றும் தென் மாநில புனிதத் தலங்களுக்கு சென்று தரி சிக்க வேண்டும் என்பது வாழ்க்கையில் ஒரு லட்சியமாகவே இருக்கும். ஆனால், அங்கெல்லாம் எப்படி செல்வது, பயண ஏற்பாடுகளை எப்படி கவனிப்பது, தங்கும் வசதிகள் எங்குள்ளன போன்ற விவரங்கள் தெரி யாமல் இருக்கக் கூடும்.
அவர்களுக்கு உதவும் வகையிலேயே இந்தியாவில் உள்ள புனிதத் தலங்கள் சிலவற்றை பற்றி மட்டும் ஆசிரி யர் இப்புத்தகத்தில் விவரி த்துள்ளார். உல்லாச சுற்றுலா செல்பவருக்கும் சரி , ஆலயங்களை தரி சிப்பதற்கு மட்டும் என ஆன்மிக சுற்றுலா செல்பவருக்கும் சரி , மாநிலம் வாரி யாக பரி த்து, அப்பகுதியில் உள்ள சிறப்பு விவரங்கள், கோயில்கள் பற்றி விரி வாக எடுத்துக் கூறியிருப்பது பயனுள்ளதாகவும், வழிகாட்டியாகவும் இப்புத்தகம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.