ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து தங்களது அடையாளத்தைப் பதித்த பெண்கள் உண்டு. தாங்கள் செய்த சாதனைகளால் அந்தத் துறைக்கே தனி அடையாளம் ஏற்படுத்திய பெண்கள் இவர்கள்.
வாள் உயர்த்தி வீரத்தை நிலைநாட்ட ஒரு ஜோன் ஆஃப் ஆர்க். அதே வீரத்தை வாள் பிடிக்காமல் பேனா பிடித்து நிலைநாட்ட ஓர் அருந்ததி ராய். மனித சமுதாயத்தின் சாதனையை விண்வெளி சென்று பறைசாற்ற ஒரு கல்பனா சாவ்லா. அன்பிருந்தால் போதும், விண்வெளிகூட நம்மில் ஓர் அங்கம்தான் என்று உணர்த்த அரவிந்த அன்னை. கருணை கருணையைத் தவிர வேறொன்றுமில்லை என்று ஒட்டுமொத்த மனித இனத்தையும் அள்ளி எடுத்துத் தழுவிக்கொள்ள அன்னை தெரசா.
இப்படி அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, அரசியல் என்று பரந்து பட்ட தளத்தில் இயங்கி, தமது முத்திரையை அழுத்தமாகப் பதித்த 24 பெண்மணிகளின் சாதனை வாழ்க்கையை அதே அழுத்தத்துடன் பதிவு செய்கிறது இந்நூல்.
இந்தக் கட்டுரைகள் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்தவை.