கார்ல் மார்க்ஸ்: ஆசிரியர்: தேவபேரின்பன். (பக்கம்: 98. விலை: ரூ.35); ரோசா லுக்ஸம்பர்க்: ஆசிரியர்: ஆ.பட்டாபிராமன். (பக்கம்: 158. விலை: ரூ.45); ஜார்ஜ் டிமிட்ரோவ்: ஆசிரியர்: இரா.சிசுபாலன். (பக்கம்: 118. டெம்மி விலை: ரூ.40)
இந்த 3 நூல்களையும் வெளியிட்டோர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு 1848 முதல் தொடங்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூலின் கம்பீரமான பிரகடனங்களுடன் அது பிறந்தது. அதை உருவாக்கியவர்கள் கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏஸ்கெல்சும் ஆவர்.
சோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். ஒவ்வொரு மனிதனின் சுதந்திர வளர்ச்சியும், அனைவரின் சுதந்திர வளர்ச்சியோடு பிணைந்துள்ளது என்ற கம்யூனிச இயக்கத்தின் பிரகடனத்தை உயர்த்திப் பிடித்த மாபெரும் மார்க்சியப் போராளி ரோசா லும் ஸம்பர்க்.
ஜார்ஜ் டிமிட் ரோவ் உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களாலும், தொழிலாளி வர்க்கத்தாலும் கம்யூனிஸ்டுகளாலும் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படும் மாபெரும் தலைவர். கிழக்கு ஐரோப்பாவின் பின்தங்கிய விவசாய நாடாகத் திகழ்ந்த பலேரியாவில் வர்க்க அரசியல் பேதம் பெற்ற பாசிசத்தின் கொடுமையை வீழ்த்துவதற்கான கொள்கை வழிகாட்டிய மா
பெரும் கம்யூனிஸ்ட். பாராட்டத்தக்க நூல் கள் இந்த நூல்கள் வரிசை. புதிய தலைமுறை புரட்சியாளர்கள், ஒவ்வொருவர் கை யிலும் இருக்க வேண்டிய நூல்கள் இவை.