புதுச்சேரி வரலாற்று சங்கம், 86, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 312).
புதுச்சேரி, வரலாற்று நாயகர்கள், புலவர்கள், இலக்கியம், காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர், என்ற தலைப்புகளில் ஆற்றிய பேருரைகள் 52 கட்டுரைகளாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் மணி மணியான கட்டுரைகள். ஆழ்ந்து வாசித்து அசை போட வேண்டியவை. குறிப்பாக "புதுவையில் பாரதி' என்ற கட்டுரையின் இறுதியில் "புதுவை அந்தப் பாட்டுப் பறவையை (பாரதி) பத்தாண்டுகள் பாதுகாத்துப் படைப்பிலக்கியம் பல படைக்கச் செய்தது. பறந்து சென்ற மூன்றாண்டுகளில் (பாரதி மீண்டும் தமிழகம் வந்து) அதன் சிறகொடித்துச் சாகடித்து தமிழ்நாடு' என்ற வரிகள் தமிழர் நெஞ்சை கனக்கச் செய்யும்.