'சிவகுமாரின் கதைகளின் ஆதார உணர்ச்சி ஈரம். ஒட்டுமொத்த மானுடகுலத்தின் மீதான அவரது பரிவு, அக்கறை, மேலான அன்பு பீறிடும் எழுத்துகள், கதைகளாக மலரும்போது இயல்பானதொரு மென்மையை எய்திவிடுகிறது.\r\n
\r\nகொஞ்சம் அசந்தால் கவிதையோ என்று எண்ணச் செய்யும் உரைநடை க.சீ. சிவகுமாருடையது. தொண்ணூறுகளின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். 'கன்னிவாடி' என்ற சிறுகதைத் தொகுப்பு முன்னதாக வெளியாகியிருக்கிறது.