உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 125. விலை: ரூ.35)
நாமக்கல் கவிஞர் நாடறிந்த கவிஞர். தேசியம், காந்தியம் இரு கண்ணெனக் கொண்டு வாழ்ந்தவர். அவருடைய படைப்புகள் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தவை.
அவருடைய மலைக்கள்ளன் கதை திரைப்படமாக, மறைந்த எம்.ஜி.ஆர்., நடித்துப் புகழ் பெற்றது. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின்போது வழிநடைப் பாட்டாக நாமக்கல் கவிஞர் எழுதிய
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்—
என்ற பாடலை யாரும் மறக்க முடியாது.
ஏராளமான கவிதைகளையும், உரைநடை நூல்கள் பலவற்றையும் எழுதிப் புகழ் பெற்றவர், தமிழ் நாட்டின் ஆஸ்தானக் கவிஞராகத் திகழ்ந்தவர். திருக்குறள் உரை எழுதியவர்.
இந்நூலில் 16 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. எல்லா கட்டுரைகளும் சுவை மிக்கவை.
நூலாசிரி யர் நிறைந்த கருத்துக்கள் பொதிந்த கட்டுரைகளில் நாமக்கல்லாரைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இவர் நாமக்கல் கவிஞர் மூ த்த மருமகன்.