அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 296).
"சேயோன் மேய மைவரை உலகமும்' என்று தொல்காப்பியத்தில் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் குறிக்கப்படும் முருகனுக்கு, கடம்பன், கந்தன், குமரன், செவ்வேள், நெடுவேள், வேலன் என ஏராளமான பெயர்கள் உண்டு. அத்தகைய ஆறுமுகக் கடவுளின் சிறப்பை நாட்டுப்புறப் பாடல்கள், சிந்து இலக்கியங்கள், பழமொழிகள் போன்றவை எவ்விதம் விளக்குகின்றன என்பதை, 19 கட்டுரைகளிலும், பிரதோஷ வழிபாடு பற்றி 20ம் கட்டுரையிலும் விவரித்துள்ளார் நூலாசிரியர்.சங்க இலக்கியம் முதல் சமீபகால இலக்கியம் வரை முருகனின் பெருமைகளைக் கூறும் பாடல்களையும், தல புராணங்களையும் தொகுத்துத் தந்துள்ள இந்நூல், ஒரு தகவல் களஞ்சியம் போலுள்ளது