ஆர்.எஸ்.பி., பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 2848 5943. (பக்கம்: 14).
புத்தமதத்தினின்று கிளைத்தது. அருவ வழிபாட்டையும், தியானத்தையும் வலியுறுத்துவது ஜென்' தத்துவம். இம்மதத்தைப் பரப்ப காஞ்சியில் இருந்து சைனா சென்றவர் போதி தர்மா. நம்மை நாமே உள்முகமாக ஒன்றுவது தியானம் என்கிறது ஜென். இதை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தவர் ஓ÷ஷா.ஞானி விழிப்படைந்த பைத்தியக்காரன், மேல்நோக்கி சிந்திக்கிறான் (பக்.21), மனமற்ற நிலையில் செயல்படும் ஞானிக்கு தூக்கம் எதற்கு (பக்.23), ஒவ்வொரு கணமும் விழிப்புடன் செயல்பட்டால் மோட்சம் (பக்.26), செயல், உயிர்த்தன்மை, மனம் என்ற மூன்றையும் ஒன்றாக்குபவன் மேல்நிலையாளன் (பக்.28), ஆண்டவனிடம் பேரம் பேசுவோர் வளர்ந்த குழந்தைகள் (பக்.30), ஏச்சையும் மறு ஏச்சையும் விட்டு லேசாக இருப்பவர் ஞானியர் (பக்.34), அகிலத்தில் அன்பைத் தொடரும் அறிவு (பக்.48) ஆத்மார்த்த சமையல் அருமையாக அமையும் (பக்.54) இப்படி பல பல அறிவுரைகள். "99 கதைகளாக நூலை கணக்கிட முடியுமா'என்றால் "இல்லை' என பதில் வரும். சில செய்திகளாகவும் சில அறிவுரைகளாகவும் கூறப்பட்டுள்ளன."ஜென்' பற்றி அறிய விழைவோருக்கு இந்நூல் ஓர் நல்ல வழிகாட்டி.