'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.
பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;
பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை.
உணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை.
எல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது.
நூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார்.
இதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு 'அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு' என்கிற பயண நூலை எழுதியவர்.'