எழில் நிலா பதிப்பகம் பி.லிட், ஏ.பி-742, "ஜி பிளாக், அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்:176)
அமெரிக்கப் பயணக் கட்டுரைகள் அடங்கிய சுவையான புத்தகம்.நியூ ஆர்லியன்ஸ், அமெரிக்காவின் பேரங்காடியான "வால்மார்ட் இங்கு ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா இயக்கம் நடத்தும் இஸ்கான், நியூ ஆர்லியன்சின் பிரஞ்சு குவார்ட்டர்ஸ், பிரசித்தி பெற்ற "பெக்காம் பழைய புத்தகக் கடை, அமெரிக்காவில் வேரூன்றி விட்ட குஜராத்திகள், வெள்ளை மாளிகை, உலகின் மிகப்பெரும் நூலகமான வாஷிங்டன் இவை பற்றி எல்லாம் பேசும் ஆசிரியர் அமெரிக்க மக்களின் விசாலமான மனதையும் புகழ்ந்து எழுதுகிறார்.
"தனி நபர் வருவாயில் அமெரிக்க மக்கள் ஆறாவது இடத்தில் இருப்பினும், உலகின் எந்தப் பணக்கார நாட்டையும் விட மிகுதியாக வளரும் நாடுகளுக்காக வழங்குகின்றனர். பல நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் கூடத் துன்புறும் பிற நாடுகளுக்காகத் தம் வருவாயில் ஒரு பகுதியை வழங்குவதைப் பார்த்தேன். இப்படி 19.2 கோடி டாலர்களைப் பிற மக்களுக்காகச் செலவிடும் கொடையாளிகள் அமெரிக்கர்