கல்வி வழிகாட்டி : நூலாசிரியர்: அசோகா சுப்பிரமணியன். வெளியீடு: செந்தில் பதிப்பகம், புதுச்சேரி-12. போன்: 0413-2339178, 98947-62799.
வாழ்க்கைக்கு வழிகாட்டுவது கல்வி. அத்தகைய கல்விக்கு வழிகாட்டுகிறது இந்நூல். கல்வியின் அவசியம், குழந்தைக் கல்வி, திட்டமிட்டு படிப்பது, பரீட்சைக்கு தயாராகுதல், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஆலோசனைகள், வாழ பல வழிகள் என வெவ்வேறான படிப்புத் துறைகளின் குறிப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன.உயர் மதிப்பெண் பெற்றிட தேர்வு நேர செயற்கைகள் பெற்றோரின் தலையாய கடமைகள் (பக்.61-67) முன்னுதாரண நேர ஒதுக்கீடு (பக்.41-42) இந்நூலின் தனிச் சிறப்பு.