சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை- 600 017, (பக்கம் : 112)
இந்திய சுதந்திரப் போர் பல்முனைப் போராட்டமாகத்தான் நடந்தது. ஒருபக்கம் திலகர், லஜபதிராய் என்றால் மறுபக்கம் வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர் சிலரும் சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை, நாம் மறந்து விட்ட அசகாய சூரர்.
ஜெர்மனியில் வாழ்ந்தவர், ஹிட்லரையே தம்மிடம் மன்னிப்புக் கேட்க வைத்தவர், நாஞ்சில் நாட்டில் தோன்றியவர் என்று பல பெருமைகளைக் கொண்டவரான "ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை பற்றி சுருக்கமாக அதே சமயம் முக்கியமான விஷயங்களை விட்டுவிடாமல் ஆசிரியர் அவரது வாழ்க்கையை விவரித்துள்ளார். எளிய, "விறுவிறு நடையில் அமைந்துள்ளது இந்நூல்.