பழனியப்பா பிரதர்ஸ். (பக்கம்:536)
மூன்று தொகுதிகளாகக் கொணரப்படும் இத்தொகுப்பின் முதல் தொகுதி இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 17 தலைப்புகளில், அந்தந்த விஷய ஞானத்தில் சிறந்த ஆசிரியர்கள், விரிவாக எழுதியுள்ளனர். கடந்த 1939ம் வருடத்தில், அப்போது முன்னூறு வருட முதுமை பெற்றிருந்த சென்னை என்ற மெட்ராஸ் குறித்து, ஒரு நட்சத்திரக்குழு "மெட்ராஸ் டெர்சண்டினரி வால்யூம் என்ற ஒரு நூலை வெளிக்கொணர்ந்தது. பல சரித்திரக் குறிப்புகள் அடங்கிய அந்நூல் வெளிவந்த பின்னர், சென்னை நகர சரித்திரத்தை முழுவதுமாக எவரும் எழுதியளிக்கவில்லை. ஆறு வருடங்களுக்கு முன், அதுபோன்ற ஒரு நூல் வெளியிடப்பட வேண்டுமென்ற அவா, "அசோசியேஷன் ஆப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ் இன் இண்டியா, மெட்ராஸ் சேப்டர் என்ற அமைப்பிற்குத் தோன்றியது. பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன், அதற்காக ஒரு குழு பெல்லியப்பா தலைமையில் அமைக்கப்பட்டது. முத்தையா ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலில் "மெட்ராஸ் கெஜட்டீர் என்ற பெயரில் விற்பன்னர்கள் உதவியுடன் நூல் ஒன்று தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அதற்குத் தேவையான நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே சில மாதங்கள் ஆயின. மொத்தத்தில் மூன்று வால்யூம்களாக இந்நூலைக் கொணரத் திட்டமிட்டு, அதற்காகக் கடினமாக உழைத்த பெருமை முத்தையாவையே சாரும். இப்போது விமர்சனத்திற்கு வந்துள்ள இத்தொகுதியில், பதினேழு ஆசிரியர்கள் பங்கு கொண்டுள்ளனர். ஒவ்வொரு தலைப்புமே தனியாக விமர்சிக்க வேண்டியவை. ஆயினும், சில ஆசிரியர்கள் தனித்து காணப்படுகின்றனர். இந்த நகரத்தின் புவியியலைப் பற்றி சுஷீலா ராகவன் இந்திரா ராகவனுடன் கலந்து விவரித்திருக்கிறார். அதன் மூலம் நகரத்தின் நீர்வழிப்பாதைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். கூவத்தைப் பராமரிக்குமுன், நிபுணர்கள் இதைக் கட்டாயம் படித்தல் வேண்டும். எப்போதுமே சுற்றுச்சூழல் மற்றும் விலங்கினங்களைப் பற்றி எழுதும் தியோடர் பாஸ்கரன், நகரத்தின் பின்புலத்தில், விலங்கினங்களைப் பற்றியும், நகரங்களின் மதங்களைப் பற்றி, ப்ரதீப் சக்கிரவர்த்தி, அன்வர் மற்றும் சாமுவேல் மனோகரும், தொல்லியலைப் பற்றி, ஏற்கனவே சிம்பல்ஸ் ஆப் ட்ரேட் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்ற டாக்டர் சுரேஷும், சரித்திரத்தைப் பற்றி ஷண்முகசுந்தரமும், படைபலத்தைப் பற்றி ராமச்சந்திரனும், நகராண்மையைக் குறித்து ÷ஷாபா மேனனும், இறையாண்மையையும் அன்றைய மேலாண்மையைப் பற்றி பெல்லியப்பாவும் பெண்ணியத்தைப் பற்றி பிரேமா கஸ்தூரி மற்றும் பிரேமா ஸ்ரீனிவாசனும் விவரித்திருக்கின்றனர். சில கட்டுரைகளைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வேண்டியதாகிறது. அவை, சரித்திரம் 1600 - 1900 மற்றும் சரித்திரம்1900 - 2000+ என்பவை. சென்னையின் முக்கியமான எல்லா சரித்திர விவரங்களும் இவற்றில் பொதிந்துள்ளன. மிகவும் பயனுள்ள கட்டுரைகள். முத்தையா எல்லாவற்றையும் முறையாகத் தொகுத்து அளித்துள்ளார். இது ஒரு வேள்வி போன்றது. ஆகையால், இந்த பதிப்பு ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் அரசைச் சார்ந்த எல்லா அமைப்புகளிலும், அரசு நூலகங்களிலும் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும். ஒரே நூலில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது சாதாரணமாக நடக்கக்கூடியதன்று. தொடர்ந்து இன்னும் இரு பதிப்புகள் வரவுள்ளன. இவையெல்லாமே போற்றப்பட வேண்டியவை.
இந்நூலைப் பிரசுரிப்பதில் மிகுந்த சிரத்தை காட்டியுள்ள பதிப்பகத்தார் போற்றுதலுக்குரியவர்கள். இது ஒரு சிறந்த தொகுப்பு; பேரார்வத்துடன் உண்டாக்கப் பட்டுள்ளது.முத்தையாவின் கடின உழைப்புக்கு ஒரு வெற்றி இது. சென்னை சரித்திர ஆர்வலர்களுக்கு ஒரு சேர்மானம். தமிழாக்கம் செய்யப்பட்டால்