முகப்பு » இலக்கியம் » தனித்தமிழ் இயக்கத்

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார்

விலைரூ.200

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: மறைமலையடிகள் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
மறைமலையடிகள் பதிப்பகம், 28, தாமரைத் தெரு, பூம்பொழில் நகர், ஆவடி, சென்னை-62. தொடர்புக்கு: 044-2637 1643. (பக்கம்: 334)

தமிழுக்காகவே பிறந்தவர் மறைமலை அடிகளார். 75 ஆண்டுகள் தமிழ் மண்ணில் புகழ் பூத்த பெருவாழ்வு வாழ்ந்தவர் மறைமலை அடிகளார் .தமது 16வது வயதிலேயே தமிழை இலக்கணம் முதல் இலக்கியம் வரை முறையாக கற்றுணர்ந்தவர். அடிகளார் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.குறிப்பாக 1959ம் ஆண்டு அடிகளாரது வாழ்வியல் சரிதையை அரிது முயன்று 900 பக்கங்களில் எழுதி வெளியிட்ட பெருமை அடிகளாரது திருக்குமாரரான மறை.திருநாவுக்கரசு அவர்களைச் சாரும். அந்நூலில் உள்ள பல சுவையான தகவல்களோடு அடிகளாரது பேரன் மறை தி.தாயுமானவன் இந்நூலைப் படைத்துள்ளார். மறைமலையடிகள் வரலாறு எனத் துவங்கி எடுத்தாளப்பட்ட நூற்பட்டியல் என 35 தலைப்புகளில் அத்தியாயங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர்.

குறிப்பாக அடிகளார் சைவ சித்தாந்த மகாசமாசம் நிறுவுதல் (பக். 26), தந்தை பெரியாருடன் நட்பு (பக். 88), திரு.வி.க.,வுடன் தொடர்பு (பக். 116), மதுரை தமிழ் சங்கம், கரந்தை தமிழ் சங்க விழாவில் நடைபெற்ற முதன்மையான வரலாற்று நிகழ்வு (பக். 53), 100க்கு 80 வடசொல்லும் 20 தமிழ் சொல்லுமாக எழுதினால், பேசினால் தமிழ் எப்படி பிழைத்தல் கூடும் (பக். 53), கொழும்பு நகரில் நடத்திய தமிழ் பொழிவுகள் (பக். 106) எனப் பல செய்திகளை மிக மிக நேர்த்தியாக சுவைபட பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.அடிகளார் அவர்களது மும்மொழிப் புலமை, வடமொழி காவியமான சாகுந்தல தமிழ் மொழிபெயர்ப்பு, அடிகளார் அவர்களது நாட்குறிப்பு 1898 ஜன., 3 முதல் 1950 ஆக., 4 வரை உள்ளவற்றில் முக்கிய செய்திகள் கொண்ட நாட்குறிப்புகளை பக். 195 முதல் 245 வரை பதிவு செய்துள்ளார். தனித்தமிழ் தந்தையென அடிகளார் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கின்ற அப்பெருமானின் படைப்புகளின் விவரக் குறிப்போடு பக். 246 / 294 வரை பதிவு செய்துள்ளது, இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு மறுவாசிப்பிற்கு துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை. அன்பர்களே, நாம் தமிழை உயிரோடு வைக்கப் பாடுபட வேண்டாம். ஐயகோ தமிழை கொல்ல மடிகட்ட நிற்கலாமா என வேண்டிக் கொண்டவர் அடிகளார். ஒவ்வோர் தமிழனும் வாங்கிப் படித்துணர்ந்து அவ்வாறு வாழ்வியலை நடத்திட துணை நிற்கும் இந்நூல் உதவிடும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us