விலைரூ.100
புத்தகங்கள்
Rating
(பக்கங்கள்: 240+270) தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் 1,000 ஆண்டு சிறப்பை மையமாக வைத்து, இந்த ஆண்டு தீபாவளி மலரை விஜயபாரதம் இதழ் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முகப்பு அட்டை படத்திலேயே இளம் ஓவியர் காந்தியின் கைவண்ணத்தில் கோவில் தோற்றம் முகமன் கூறி நம்மை வரவேற்கிறது.சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் கருவூர் தேவரும், ராஜராஜ சோழரும் என்ற கட்டுரையும், கடலோடி கே.ஆர்.நரசய்யாவின் "சீனாவின் சிவன் கோவிலும், ராஜராஜனின் கடல்வழி திறனும் என்ற கட்டுரையும் மிகச்சிறந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடு. பிரபல எழுத்தாளர்களான பின்னலூர் விவேகானந்தன், குடவாயில் பாலசுப்ரமணியன், லா.சு.ரங்கராஜன், பி.என்.பரசுராமன், ஓவியர் தாமரை ஆகியோரின் கட்டுரைகள், வாசர்களின் கவனத்தை நிச்சயம் கவரும். சிறந்த கல்விமானும், சர்ச்சைக்குரிய அரசியல்வாதியுமான சுப்ரமணிய சுவாமி, வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோரின் பேட்டி கட்டுரைகள் விஷய கணத்துடன் உள்ளன. சிறுகதைப் பிரிவில் அசோகமித்திரன், கவுதம் நீலாம்பரன், தேவி பாலா, இந்திரா சவுந்திரராஜன் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பு சேர்க்கிறது. பன்னிரெண்டு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த தீபாவளி மலரின் சிறப்பு அம்சங்களாக கோவில், ஆன்மிகம் பற்றிய கட்டுரைகளை தான் சிறப்பாக சொல்ல வேண்டும். ஆழமாக சிந்திக்க தூண்டும் பல நல்ல விஷயங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கட்டுரைகள், கதைகள், கவிதைகள், பேட்டிக் கட்டுரைகளுடன் கூடிய தீபாவளி மலர் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!