விலைரூ.80
புத்தகங்கள்
உலக நாகரிகம் வழங்கிய நாடுகளும், வரலாறும்
விலைரூ.80
ஆசிரியர் : கமலா கந்தசாமி
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: வரலாறு
Rating
நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 17.(பக்கங்கள்: 224.)
சமூக சமுதாய மேம்பாடு, வருங்கால சந்ததியினர் மற்றும் உலகினரை வியப்பில் ஆழ்த்தும் விதமான, காலத்தினால் அழிக்க இயலாத சிற்பங்கள் திருக்கோவில்கள் - கோபுரங்கள் போன்ற அருங்கதைகள், இலக்கிய எழுத்தோவியங்கள், பாரம்பரிய நீதி-நெறி சாஸ்திரங்கள் போன்ற மூதாதையர்களின் பெருங்கொடைகளே ஒரு நாட்டின் நாகரிகத்தை உலகெறியச் செய்கின்றன. சிந்துவெளி நாகரிகச் சிறப்பினைப் பறை சுற்றுகின்ற 5,000 ஆண்டு தொன்மையான மொகஞ்சதாரோ, ஹரப்பா வாழ் மக்கள் பயன்படுத்திய களிமண் முத்திரைகள், ஆடை அணிகலன்கள்.
கட்டட-சிற்பக்கலை வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான பிரமிடுகள் வாயிலாக நாம் அறியும் எகிப்து நாகரிகம். 2880 கி.மீ., நீளமும் ஆறு மீட்டர் உயரமும், கொண்ட கருங்கற்களாலான பெருஞ்சுவர் சீன நாகரிகத்தின் பிரதிபலிப்பு. முதல் மக்கள் ஆட்சி உருவாக்கியது மற்றும் ஒலிம்பிக் போட்டி விளையாட்டுகளைத் தோற்றுவித்த கிரேக்க ரோமானிய நாகரிகங்கள் ஆகியவற்றை இதில் காணலாம். இத்துடன் இதர அமெரிக்க ஆப்பிரிக்க நாகரிகங்கள், இவற்றின் வளர்ச்சிக்கென துணை நின்ற மதங்கள், உலகளாவிய பல்வேறு புரட்சிகள், மற்றும் ஐ.நா., சபையின் தோற்றம் - செயல்பாடுகள் சாதனைகள் எல்லாம் எடுத்துரைக்கப்பட்டு... இந்நூல் பரந்து விரிந்து திகழ்கிறது. பொது அறிவை மேம்படுத்தி, அறிவு தாகத்தைத் தணித்துக் கொள்ள முனைவோர், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விழைவோர்களுக்கெல்லாம் பயனுள்ள நூல் இது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!