விலைரூ.125
புத்தகங்கள்
Rating
கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் மாடி, அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 208)
விளம்பரத் துறையின் தந்தை என அழைக்கப்படும் டேவிட் ஒகில்வியை முழுவதும் அறிய இந்நூல் உதவும். ஒகில்வி அண்ட் மேத்தர் நிறுவனரான அவரது விளம்பரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்தியாவிலும் பிரசித்தி பெற்ற அந்த தொழில் சிறப்பை அந்தந்த வட்டார மொழியில் விளம்பரப்படுத்தி இளைஞர்களை ஈர்ப்பதே இந்நூல் உருவாக காரணம்.
தமிழகத்தில் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் பாடமாக உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இப்புத்தகம் பெரிதும் உதவும். அம்முயற்சியில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். "உண்மை தகவல்களை தாருங்கள், நுகர்வோரை கவரும் சிறப்பான உத்திகளை புதுப்புது விதமாக கண்டறியுங்கள் என, பல தகவல்கள் விவரமாக இதில் இடம் பெற்றிருக்கின்றன. விளம்பரத் துறையில் உள்ள அனைவருக்கும் இது பயன்படும்
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!