விலைரூ.800
புத்தகங்கள்
தமிழையும், வடமொழித் தொடர்பையும் காட்டும் கண்ணாடி
விலைரூ.800
ஆசிரியர் : நாகசுவாமி
வெளியீடு: தமிழ் ஆர்ட்ஸ் அகடமி
பகுதி: தமிழ்மொழி
Rating
11, 22வது குறுக்கு தெரு
சென்னை - 600 090
பக்கம்: 425
தமிழையும், சமஸ்கிருதத்தையும் ஆடியில் காட்டுவது போல், எழுதப்பட்டுள்ள இந்நூல்,சிறந்த ஆராய்ச்சி நூல். பிராமி என்ற எழுத்திலிருந்துதான் இந்தியாவிலும், கிழக்கிந்திய நாடுகளிலும் உள்ள பிராந்திய எழுத்துக்கள் தோன்றின என்று கூறும் ஆசிரியர். அது இந்தியாவின் வடமேற்குப் பகுதியாகிய, சரஸ்வதி நதிப் பகுதியில் அசோகர் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்கிறார்.
வேதத்தில் வரும் எல்லா ஒலிகளையும், எழுத்து வடிவில் வடிக்கமுடியாது. ஆகையால், அந்த ஒலிகளை, செவிவழியாகவே கேட்டு காப்பாற்ற முடியும் என்பதால், எழுதாக்கிளவியாக அதை அறிந்தார்களே ஒழிய, பிறிதல்ல. அத்துடன் வேதியர்கள் வேதம் மட்டும் கற்கவில்லை. ஆறு அங்கம் என்னும், நிருக்தம், வியாகரணம், கல்பம், கணிதம் (சோதிடம்), செய்யுள் (சந்தஸ்), பிரம்மம் என்னும் "எழுத்தாராய்ச்சி யையும் படிக்கவேண்டும். நீதி நூல்களான அறநூல்களைக் கற்கவேண்டும்.
இவற்றை எல்லாம் கற்க, எழுத்து இன்றியமையாத ஒன்று. அதனால்தான் வேதியர் குழந்தைகள் முதலில் கற்பதே "அக்ஷராப்பியாசம் என்பதைச் சுட்டுகிறார். வேதத்திலேயே (தைத்தீரிய வேதத்தில்) முதன்முதலில் கற்கவேண்டியது "வர்ணஸ்வர எனக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மவுரியப்பேரரசர் அசோகர், பவுத்த தர்மத்தை பரப்பியதாக எங்கும் குறிக்கவில்லை. ஆனால் எங்கு சென்றாலும், அங்கு பிராமணர்களைச் சென்று வணங்கி, தானம் கொடுத்ததாக குறித்துள்ளார். அவன் கூறும் "தர்மம் என்பது வேதத்தில் கூறப்பட்டுள்ளதே தான், வேத வாக்யங்களை அப்படியே எடுத்து தனது கல்வெட்டில் மீண்டும் மீண்டும் குறிப்பதோடு, தான் கூறுவது மிகவும் தொன்மைக் காலத்திலிருந்து, தொடர்ந்து வந்த தர்மங்கள் தாம் என்பதையும் காட்டுகிறார்.
தொல்காப்பியரும், தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும்போது பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், வணிகர் பக்கம், வேளாண் பக்கம், எனக் காட்டும் இடங்களில் எல்லாம், தமிழ் சமுதாயம் வேதமரபையே பின்பற்றியுள்ளதாக, ஆசிரியர் தெரிவிக்கிறார்.
தமிழ்மக்கட் பிரிவில் பார்ப்பனர், அரசர், வணிகர் ஆகிய மூன்று வர்ணத்தவருடன் வேளாண்குடி மக்களில் அரசருக்கு பெண் கொடுத்தோர், அரசரால் பட்டம் பதவி கொடுத்து சிறப்பிக்கப்பட்டோரும், உயர்குடி வேளாண் மாந்தர் என்று கொள்ளப்பட்டதால், இவர்கள் அனைவரும் வேதம் படித்தவராக விளங்கினர் என்கிறார்.
மாற்றுக் கருத்து கொண்டவர்களும், இந்த ஆய்வுகளை புறந்தள்ள முடியாதவாறு, கருத்துகள் இந்த ஆங்கில நூலில் இடம் பெற்றிருப்பதாக ஆசிரியர் தெரிவித்திருப்பது உற்று நோக்கத்தக்கது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!