முகப்பு » சமயம் » SIDDHARTHA Prince of Peace

SIDDHARTHA Prince of Peace

ஆசிரியர் : ஜி.கே.ஆன்ந்த குமார ஸ்ரீ

வெளியீடு: புத்தா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: சமயம்

Rating

பிடித்தவை

 சுவாமி விவேகானந்தர்  "புத்தரின் இதயம் தேவை எனப் போற்றுவார். அன்பின் திருஉரு புத்தர். அரச நெறியில்  பிறந்து, சுகபோகங்களை அனுபவித்த  இளவரசர் சித்தார்த்தர் கண்ட  அன்பு நெறி இன்று உலகின் பல பகுதிகளில் புத்தமதக் கோட்பாடாக நிற்கிறது.
இந்த நூலை, ஆங்கிலத்தில் அழகுற அமைத்த ஆசிரியர் ஆனந்த குமாரஸ்ரீ  தூதரகப் பணியாற்றியவர். புத்த நெறியில் தோய்ந்தவர். தற்போது மலேசியாவில்  வாழ்கிறார்.கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூறாண்டுகளுக்கு முன்பே, மிகச் சிறந்த  நாகரிகம் இந்தியாவில் இருந்தது. ஒரு பக்கம் வேதாந்த கருத்துக்கள்  பேசப்பட்டாலும் மறுபக்கம், "மோட்சம் எதற்கு, நாளைக்கு உயிருடன் இருப்பது நிச்சயமல்ல, அதற்கு முன் மகிழ்ச்சி, கொண்டாட்டத்துடன்  பணத்தை செலவழிப்போம் என்ற  சாருவாகா என்ற அறிஞர் கருத்தும் ஒரு தரப்பில்  பேசப்பட்டது.அந்த நிலையில் வேதத்தை அடிப்படையாக கொண்டவற்றை எதிர்த்து உருவானதே புத்தர் நெறியும் அதன் கொள்கைகளும் ஆகும்.

அந்தக் காலகட்டத்தில், பிறந்த பேரறிவாளக் குழந்தை புத்தர். மன்னர் குலத்தில் வளர்ந்து பின்பு  மக்கள் சந்திக்கும் துக்கங்களைக் கண்டு, அதை ஆராய்ந்து  அடைந்த அன்பு நெறியை இந்த நூலில் சிறப்பாகக் காணலாம். நன்கு வாழும் ஒருவர் இறப்பைச் சந்திக்கிறாரே, இந்த இறப்பைத் தடுக்க  வழி கிடையாதா? துக்கமற்ற வாழ்க்கை கிடையாதா என்ற கேள்வி தான் புத்தரை உயர்த்தியது.ஆனால், அவர் தூங்காமல், சிந்தனையுடன் இருந்ததை அவர் அன்னை  கண்டு மனம் வருந்தியதை, ஆசிரியர் அப்படியே வார்த்தைகளால்  வடித்துள்ளார். தன்  இளம் மனைவியையும் புத்தர்  ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை. அவர் துறவு மேற்கொண்டதைக் கூறும்போது, "துக்கத்தில் இருந்து  விடுபட்டு,  தூய்மையான  துறவில் புகுந்த எனக்கு அரச வாழ்வும், செல்வச் செழிப்பும் மன அமைதியைத் தரவில்லை என்று புத்தர்  குறிப்பிட்டு, அமைதியைத் தேர்வு செய்தார்  என்று, அவரை ஆசிரியர்   சிறப்பாக படம்பிடிக்கிறார்.புத்த பெருமானின் தேடலை விளக்கும் நல்ல நூல்

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us