முகப்பு » வாழ்க்கை வரலாறு » Soniyha _Gandhi _ ( Oru _ Vazhalkkai _Varhalaru )

Soniyha _Gandhi _ ( Oru _ Vazhalkkai _Varhalaru )

விலைரூ.185

ஆசிரியர் : எ.பொன்னுசாமி

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

  பக்கம்:296 

இந்த வாழ்க்கை வரலாற்று நூல், இத்தாலிய நகரமான, ஆர்மாசானோவில் இருந்து, மிக்க பாதுகாப்பான அதிகாரம் மிக்க 10, ஜன்பத் இந்திய இல்லத்திற்கு சோனியா மேற்கொண்ட அரசியல் நெடும்பயணத்தை அழகுற வருணனை செய்கிறது. சோனியா தமக்கு , இந்திராவே உதாரணத் தலைவராகக் கருதினார். ஆனாலும், 1998ல் தயக்கத்துடன் அரசியலை ஏற்றபின், தனது மாமியார் போக்கினைக் கடைபிடிக்காது தனக்கெனத் தனி அணுகுமுறையை அமைத்துக் கொண்டு, அதில் வெற்றிக் கண்டார்.

கடந்த 2004, 2009 ஆகிய தேர்தலில், ஐக்கிய முன்னேற்ற கூட்டணி வென்றாலும், பிரதமர் பதவியைத் தியாகம் செய்ததால், உலகோர் மதிப்பில் உயர்த்தப்பட்டார். பின், 1977ல் அதிகாரம் இன்றி இருந்த நிலையில், ராஜிவும், சஞ்சயும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர். அம்மாவின் தோல்விக்கு, சஞ்சய்தான் காரணம் என்று ராஜிவ் வெறுத்தார்.(பக்., 41) மேனகாவை விட, சோனியா மீது இந்திரா தனி அன்பு செலுத்தினார்.
சஞ்சய் மரணத்திற்குப் பின், மேனகா அரசியலுக்கு வருவதை சோனியா தடுத்துவிட்டார். (பக்., 53) ஆறே மாதத்தில் இந்தியைக் கற்றது, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது, "2ஜி அலைக்கற்றை ஊழல், போபர்ஸ் ஊழல்களை எதிர்கொண்டது போன்ற, பல அதிரடி அரசியல் நிகழ்வுகளைத் தந்த சோனியாவின் வாழ்க்கை வரலாற்றை படிப்பவருக்கு சோர்வே வராது.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us