விலைரூ.180
முகப்பு » கட்டுரைகள் » அரவாணியம்
புத்தகங்கள்
Rating
பக்கம்: 272
கோசா, அலி என்று பேச்சு வழக்கில் நாம் குறிப்பிடும் பிரிவினரை, "அரவாணி என்று இந்த நூலில் சுட்டுகின்றனர்.இவர்களுக்கு திருநங்கையர் என்ற பெயரும் உண்டு. மகாபாரதக் கதையில் வரும், "அரவான் என்பவனைப் பலியிடும் முன்பாக, கிருஷ்ணன் பெண்ணுருவெடுத்து அரவானை மணம் செய்து கொள்கிறார். அதனால், ஆணாகப் பிறந்தும், பெண் தன்மையுடையவர் அரவானி எனப்பட்டனர்.( அரவாணி -இதில் ஏன் "டண்ணகரம்?)
முனைவர் பட்ட ஆய்வுக்காகச் செய்யப்பட்ட ஆராய்ச்சி நூல் இது. வேதகாலம் தொட்டு, தொன்னூல்களில், திருக்குறளில், சங்க இலக்கியங்களில், சமயநூல்களில், காப்பியங்களில், தற்கால நூல்களில் என்று அனைத்திலும் காணப்படும் அரவாணிகள் பற்றிய செய்திகளைத் திரட்டி, ஆதாரங்களைத் தந்துள்ளார் ஆசிரியர்.
அலிகள் பற்றி சமுதாய மதிப்பீடு, இந்நாளிலும் ஏளனமாகவே இருக்கிறது. ஆயினும், அவர்களுக்கு நியாயம் கிடைக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. அரவாணிகளும், மனிதர்கள் தான் என்ற உணர்வோடு, அவர்களிடம் பரிவோடு நடந்திட வேண்டும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.அரவான் - அரவாணி என்று தானே வரவேண்டும். வாணி எனக் கலைமகள் போல அழைத்துவிட்டனர் போலும். ஆய்வுநெறியில், எழுதப்பட்ட இந்நூல் அனைவருக்கும் பயன்படத் தக்கதே.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!