விலைரூ.150
முகப்பு » கட்டுரைகள் » நல்லவன் வெல்வது
புத்தகங்கள்
நல்லவன் வெல்வது எப்படி?
விலைரூ.150
ஆசிரியர் : பவான் சவுத்ரி
வெளியீடு: ஆசிரியர் வெளியீடு
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 186
நேர்மையற்றவன் செயல்படும் விதங்கள், நேர்மையாளன் எழுச்சி பெறுவதற்கான வழிகள். ஆளுமையின் நிலைத்திருக்கும் அடித்தளங்கள் என்னும் மூன்று பெரும் தலைப்புகளுக்குள், 62 சிறு சிறு கட்டுரை வடிவான வழிமுறைகள், நுட்பங்களை வரலாற்றுப் பின்னணிகள், அறிஞர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகள், பழமொழிகள், அனுபவப் பொன்மொழிகள் என, ஆங்காங்கே சான்றாதாரங்கள் தந்து, மிகவும் விறுவிறுப்பான நடையில் நூலை
அமைத்துள்ளார் நூலாசிரியர்.எந்த மலரின் நறுமணமும், காற்றுக்கு எதிர் திசையில் பரவுவதில்லை... ஆனால், நல்லியல்பின் நறுமணம் காற்றை எதிர்த்துப் பரவுகிறது. நேர்மைத் திறன் மிக்க மனிதன் தனது நறுமணத்தை அனைத்துத் திசைகளிலும் பரப்புகிறார் (பக். 137) ஓர் ஆட்சியாளரின், அறிவுக் கூர்மையை மதிப்பிடுவதற்கான
முதலாவது வழி, அவரைச் சுற்றிலும் அணுக்கமாக உள்ளோரின் தகைமையைக் கணிப்பதாகும் (மாக்கியவல்லி) (பக்.146). "வையத் தலைமை கொள் என்ற பாரதியின் வாக்கை நிறைவேற்றத் துடிக்கும் அனைவரும், அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள வழிகாட்டி நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!