விலைரூ.150
முகப்பு » கட்டுரைகள் » திருமணம்?
புத்தகங்கள்
Rating
பக்கம்: 264
திருடர்களும், பிச்சைக்காரர்களும் இல்லாத நாடு இந்தியா. அவர்களது மிக உயர்வான ஆன்மிகத்தையும், பண்பாட்டையும் உடைத்து, அவர்களது பழமையான கல்வி முறையையும், கலாசாரத்தையும் சிதைத்து விட்டோமானால், அவர்கள், நாம் நினைத்தபடி மாறிவிடுவர். இந்தியா நமக்கு ஒரு உண்மையான அடிமை நாடாகும்.இது லார்ட் மெக்காலே பிரிட்டிஷ் பார்லிமென்டில், 2-2-1835ல் ஆற்றிய உரையின் ரத்தினச் சுருக்கம்.
ஆங்கிலேயரின் இந்த பார்முலாப்படி, இந்திய நாடு கடந்த, 175 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் எப்படி எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டு, சீரழிந்து இன்று சந்தி சிந்திக்கிறது என்பதையும், பல உதாரணங்கள் மூலம் மிகத் துல்லியமாய் தோலுரித்து காட்டுகிறார் ஆசிரியர். இந்திய நாட்டின் மிகப் பழமையான மிக உயர்ந்த பண்பாடுகள், எப்படி தூக்கிப் போடப்பட்டு மிதிக்கப்படுகின்றன என்று பொருமுகிறார். எல்லாரும் படித்துச் சிந்திக்க வேண்டிய நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!