விலைரூ.80
புத்தகங்கள்
ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்
விலைரூ.80
ஆசிரியர் : சிகாமணி சம்பந்தன்
வெளியீடு: முல்லைப் பதிப்பகம்
பகுதி: தமிழ்மொழி
Rating
பக்கம்: 208
மூன்று காண்டங்கள், 30 காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில், 10 காதைகளையும், பற்பல வரிகளையும்இடைச்செருகல் என்று காரணம் காட்டி நீக்கி, தம் கருத்திற்கேற்றவற்றை மட்டும், 20 காதைகளாக அமைத்துப் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். வஞ்சிக் காண்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
காப்பியத்தின் சுவை மிளிரும் பகுதிகளான கானல் வரி, ஆய்ச்சியர் குரவை இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. வைதிக, சைவ, வைணவக் கருத்துகளும் அதற்கேற்பப் பாத்திரங்களும் நீக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் முற்றிலும் சமணக் காப்பியம் என்று நிலைநாட்ட முற்பட்டுள்ளார். திருக்குறளும் சிலப்பதிகாரமும் சமயம் கடந்த பெருமை; அறம் தழுவிய - அனைத்து சமயக் கருத்துகளையும், பொருத்தமாகச் சுட்டிச் சொல்லுகின்ற இலக்கியங்கள் என்பதே அறிஞர் கருத்து.இந்நூலாசிரியர், தம் கருத்துகளுக்கு ஆதாரமாக முன்னரே, இந்நூல் கருத்துகளைச் சொன்ன சிலரைக் காட்டியிருப்பினும், பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு (?) இயக்கச்சார்பு, நூலில் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
கி.பி., ஐந்தாம் நூற்றாண்டில் நிலவியசமுதாயச் சூழல், சமய நிலைகள், காவியத்தின் மொழி நடை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், இடைச்செருகல் இருப்பதற்கு இடமில்லை என்றே நடுநிலையாளர்கள் கருதுவர். ஆய்வு என்னும் வகையில் இந்நூல் பலருக்குப் பயன்படும் என்பதும், பலரும் படித்து உண்மையை ஆராய வேண்டும் என்பதும் நம் கருத்து.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!