‘சிலம்புச் செல்வர்’ என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, ‘நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன’ என்று, கூறிய வீரவுரையைக் கேட்டபிறகு, ம.பொ.சி., இந்த தலைப்பில், நீண்ட ஆய்வு செய்து, இந்த நூலை, அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார்.
1934ல் வெளியான, ‘நவீன கோவலன்’ 1946ல் ‘கண்ணகி’, 1966ல் ‘பூம்புகார்’ ஆகிய திரைப் படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை சிறப்புடன் விளக்கியுள்ளார். தெருவெங்கும் சிலப்பதிகாரத் தமிழ் முழக்கம் செய்து வெற்றிகண்ட ம.பொ.சி.,யின் போராட்டப் பதிவு நூல்.
முனைவர் மா.கி.ரமணன்