திருக்குறள் அறநூல் என்பதை அனைவரும் அறிவர். ஆசிரியர் தமிழில் அதிக பற்று கொண்ட தமிழாசிரியர். அறத்துப்பாலில் உள்ள, குறள் பாக்கள் சிலவற்றிற்கு எளிய தமிழில், விருத்தப்பா கவிகளாக அமைத்து விளக்கம் தந்திருப்பது இந்ந நூலின் சிறப்பாகும். எத்துறையில் பணிபுரிந்தாலும், அதில் முழுதாய் முயன்று அச்செயலில் புகழை அடைந்து உயர்தல் வேண்டும் என்ற கருத்தை, ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற குறளுக்கு விளக்கமாக தந்திருக்கிறார். தமிழ் ஆர்வலர்கள் படிக்க விரும்பும் நூல்.