விகடனில் தொடராக வந்தது தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. நூலாசிரியர், தூக்க மருத்துவ துறையில், பிரபலமானவர். பல்வேறு சமூக நெருக்கடிகள் இன்று அதிகமாகி விட்ட நிலையில், தூக்கமின்மை ஒரு நோயாகவே மாறி வருகிறது. ஒரு நாளைக்கு ௮ மணிநேரம் தூக்கம் அவசியம் என்பதை இந்த நூல் பல்வேறு விதங்களில் வலியுறுத்துகிறது. தூக்கமின்மை, ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு போன்ற பயங்கர விளைவுகளுக்கு வித்திடும். அதேநேரம், ஆங்கில மருத்துவ முறையை தவிர, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பிற சிகிச்சை முறைகளிலும் தூக்கமின்மையை போக்க பலவழிகள் உள்ளன. குறட்டை ஆபத்தானதா? தூக்கத்தில் கால் ஆட்டலாமா? தூக்கத்தில் பற்களை கடிப்பது நல்லதா? குழந்தைகள் நள்ளிரவில் அலறி அடித்து எழுந்திருப்பது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்திருக்கிறார்.