கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே.
கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல்.
குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் வெளிவந்த மோடியின் இந்த நூல், தற்போது கோவை சப்னா புத்தக நிலையத்தாரால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமராவதற்கு முன்பு எழுதிய, இந்த குறிப்புகளைத் தான் பிரதமரானதும் மோடி வெளிப்படுத்தியுள்ளார். இதுபோல கல்வி குறித்து மேலும் பல விஷயங்கள் இவரது மனதில் உள்ளன. அதனை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும்.
எல்.முருகராஜ்