இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், அபூர்வத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ராமநாதபுரம், திருப்புல்லாணி அருகில், தாதனேந்தல் கிராமத்தில் உள்ள புல்லாணி அம்மனுக்கு, உலக்கை சத்தமும், தயிர் கடையும் சத்தமும் கேட்கக் கூடாதாம். ராமேஸ்வரத்தில், அத்தி மரத்தால் ஆன ஆஞ்சநேயர் சிலை உள்ளதாம். ஆனைமலை மாசாணி அம்மன் சிலைக்கும், சங்ககால நன்னன், ஒரு மாங்கனிக்காக, ஒரு பெண்ணைக் கொன்ற கதைக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது ஒரு செய்தி.
கும்பகோணத்தில் ஒவ்வொரு ராசிக்குமான தனித்தனி ஆலயங்கள் உள்ளனவாம். தாளவாடி அருகே உள்ள கொங்கலி சிவன் கோவிலில், பெண்கள் நுழையக் கூடாதாம். அதற்கு ஒரு புராண கதை கூறப்படுகிறது. ஆனால், வாசலில் நின்று வணங்கும் கர்ப்பிணிப் பெண்கள் நலம் பெறுகின்றனராம். நாமக்கல் அருகே அழியா, ‘இலங்கை அம்மன் கோவில்’ உள்ளதாம். பயன்தரும், பக்திமணம் பரப்பும் செய்திகள் நிறைந்த நூல்.
பவானி மைந்தன்