சினிமா ரசிகர்களுக்கு உகந்த, நாவல். ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பது போல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா; கதாநாயகி கீர்த்தனா. பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய் விடுகிறாள்.
எனவே, கீர்த்தனாவை மணமுடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு. தன் தந்தைக்கு, பாலா பண உதவி செய்கிறான் என்பதற்காகவே, அவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள் கீர்த்தனா.
கல்யாணம் ஆன புதிதில், பாலா – கீர்த்தனா உறவில் விரிசல். காலம், மனப் புண்ணை ஆற்றி, பாலாவையும், கீர்த்தனாவையும் ஒன்று சேர்க்கிறது. இடையிடையே சில பாடல்களையும் இணைக்கிறார் பிரவீணா. விறுவிறுப்பான நாவல்.
எஸ்.குரு